ஹைதராபாத்தில் மாமியாரை நடுரோட்டில் அடித்த மருமகள்-சிசிடிவியில் சிக்கிய காட்சிகள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஹைதராபாத்தில் உள்ள ஃபெரோஸ் காந்தி நகரில் 55 வயது தக்க பெண் ஒருவரை அவரது மருமகள் நடுரோட்டில் இழுத்து போட்டு அடித்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. 


Advertisement

image

அந்த பெண்ணை அவரது மருமகள் அடிக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு ஆளானவர் காஷ்னிமா சுல்தானா என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 


Advertisement

சுமார் நான்கு நிமிடங்கள் வரை ஓடும் அந்த வீடியோவில் தாஷ்னிமாவை இரண்டு பெண்கள் இணைந்து தாக்கியுள்ளனர். அதில் ஒருவர் அவரது மருமகள் மற்றொருவர் மருமகளின் தாயார். 

image

“மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே நீண்ட நாட்களாவே சண்டை நடந்து வந்துள்ளது. இருவரும் ஒரே வீட்டில் கீழ் மற்றும் மேல் போர்ஷனில் வசித்து வருகின்றனர். இதில் தாஷ்னிமாவின் மருமகள் மேல் தளத்தில் உள்ளார். சம்பவத்தன்று ஊரிலிருந்து திரும்பிய அவரது மருமகள் தனது போர்ஷனில் மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி இல்லாததால் மாமியாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.


Advertisement

image

ஒரு கட்டத்தில் பேச்சு வார்ததை முற்றியதால் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு தாஷ்னிமாவை அவரது மருமகளும், மருமகளின் தாயாரும் சேர்ந்து தலை முடியை பிடித்து தரதரவென இழுத்து வந்து வீதியில் போட்டு தாக்கியுள்ளனர்” என ஹுமாயூன் நகர காவல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக மாமியார் மற்றும் மருமகள் தரப்பில் தனித்தனியே காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement