‘தோனி பாணியில் தோனிக்கே ஸ்கெட்ச் போட்ட தினேஷ் கார்த்திக்’ முன்னாள் வீரர்கள் புகழாரம் 

KKR-CAPTAIN-Dinesh-Karthik-WON-CSK-CAPTAIN-Dhoni-in-Dhoni-S-style-IN-IPL-2020-SAYS-Former-INDIAN-CRICKET-players

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான அஜய் ஜடேஜா மற்றும் வீரேந்திர சேவாக் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்சியை புகழ்ந்துள்ளார். 


Advertisement

image

“சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்சி அற்புதமாக இருந்தது. இத்தனை காலமாக தோனி எப்படி தனது வித்தியாசமான அணுகுமுறையினால் எதிராணிகளுக்கு எதிராக வியூகங்களை வகுத்து வெற்றிகளை குவித்து வந்தாரோ அதே மாதிரியான வியூகத்தை தோனிக்கு எதிராகவே வகுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார். 


Advertisement

image

பத்து ஓவர் வரை சுனில் நரைனை பயன்படுத்தாமல் இருந்த தினேஷ் கார்த்திக் சரியான நேரத்தில் அவரை பந்துவீச செய்து சென்னையை கூண்டோடு காலி செய்தார். 

image


Advertisement

சி.எஸ்.கே பெரிய இலக்குகளை சுலபமாக சேஸ் செய்யும் வல்லமை படைத்தது என மிரட்டி வந்தது. இந்த ஆட்டத்தின் மூலம் அதை உடைத்துள்ளார் தினேஷ் கார்த்திக்” என அஜய் ஜடேஜா சொல்லியுள்ளார். 

image

மறுப்பக்கம் சேவாக்கோ “ஆட்டத்தை பார்க்கும் போதே இது தினேஷ் கார்த்திக்கின் வியூகமாக இருக்குமோ என சந்தேகித்தேன். நான் எதிர்பார்த்தது போலவே சுழல் காம்போவை பத்து ஓவர்களுக்கு பிறகு பந்து வீச செய்து மொமெண்ட்டமை கொல்கத்தாவின் பக்கமா திருப்பி அசத்தியிருந்தார் தினேஷ். 

அதில் தோனி வருண் சக்கரவர்த்தியின் பந்தில் போல்டானதும் கொல்கத்தாவின் வெற்றி உறுதியாகிவிட்டது” என சொல்லியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement