இந்திய விமானப்படை தினம்: விமானக் கதைகளில் நடித்த சூர்யா, கார்த்தி வாழ்த்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

’காற்று வெளியிடை’ படத்தில் விமானப்படை அதிகாரியாக நடித்த கார்த்தியும், விமானத்தை அடிப்படையாக கதைக்களம் கொண்ட ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்துள்ள சூர்யாவும் இன்று இந்திய விமானப்படை தினத்திற்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள்.


Advertisement

இந்தியாவையும் இந்திய மக்களையும் காக்கும் முப்படைகளில் விமானப்படை முக்கியமானது. ஒரு நாட்டின் வளர்ச்சியையும் வீரத்தையும் உயர்த்திக் காட்டுவது போர் விமானங்களே. இந்திய விமானப்படை 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. உலகிலேயே நான்காவது மிகப்பெரிய விமானப்படையை கொண்ட நம் இந்தியாவில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர் விமானங்களும், 1700 பயன்பாட்டு விமானங்களும் உள்ளன.

image


Advertisement

இதனை சிறப்பிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்திய விமானப்பட தினம் அக்டோபர் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்திய விமானப்படையின் 88 வது ஆண்டுதினம். இதனையொட்டி விமானங்களின் சாகசங்கள் விண்ணை பிளந்து இந்தியாவின் பெருமையை உலகையே உற்றுநோக்க வைத்துக்கொண்டிருக்கும் நிலையில், பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

image

இந்நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ”விமானப்படை வீரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். நமது வானத்தை பாதுகாப்பதிலும் பேரழிவு காலங்களில் உதவுவதிலும் நம் நாட்டிற்கு வீரம் மற்றும் தன்னலமற்ற சேவை செய்ததற்காக விமானப்படை சகோதரர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

அவரது ட்விட்டை ரீட்விட் செய்துள்ள நடிகர் கார்த்தி இந்திய விமானப்படையின் புத்திச்சாலியான வீரம் மிக்க அதிகாரிகளை சந்தித்த அதிர்ஷ்டம் எனக்கு ஏற்கெனவே கிடைத்திருக்கிறது. அவர்களின் அர்ப்பணிப்புக்கும் தேசபக்திக்கும் மரியாதை கலந்த வணக்கம். ஜெய்ஹிந்த்” என்று தெரிவித்துள்ளார்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement