"எனக்காகப் பரிந்துரை செய்யுங்கள் என்று அப்பாவிடம் கேட்டதில்லை" - ஸ்ருதிஹாசன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தற்போது எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் உருவாகிவரும் லாபம் படத்தில் முதல்முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துவருகிறார் ஸ்ருதிஹாசன். கிராமப்புற வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்ட கதையில் ஸ்ருதிக்கு மிக வலிமையான, சுதந்திரமான பெண்ணின் கதாபாத்திரம். நடிப்புப் பற்றி அவரது கருத்துகள் மாறியிருக்கின்றன. பெண்ணை மையப்படுத்தும் பாத்திரத்தில் நடிப்பதையே அவர் விரும்புகிறார். சமீபத்தில் அவர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மனந்திறந்து பேசியுள்ளார்.


Advertisement

"தொடக்கம் முதல் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடிப்பதை விரும்புகிறேன். கொஞ்சகாலம் ஸ்கிரிப்ட் கேட்பதில் இருந்து பிரேக் விட்டிருந்தேன். சற்று வித்தியாசமான கதைகளை எதிர்பார்க்கிறேன். நான் என் கேரியரின் அடுத்த கட்டத்தில் இருக்கிறேன். ஊரடங்கு நேரத்தில் மும்பை வீட்டில் என் பூனையுடன் நேரத்தைச் செலவிட்டேன். வீட்டு வேலைகளைத் தாண்டி இசை முயற்சிகளுக்காக எழுதினேன்" என்று உற்சாகப் பேசும் ஸ்ருதிஹாசன், இரு மாதங்களுக்கு முன்பு ஒரு பாடலை வெளியிட்டார்.

image


Advertisement

"லாபம் படத்தில் என் கேரக்டரை விரும்புகிறேன். சமூகம், பெண்கள், மக்களின் உணர்வுகள் மற்றும் பிரச்னைகள் பற்றி நல்ல புரிதலை வைத்திருக்கிறார் இயக்குநர் ஜனநாதன். கதாநாயகிகளுக்கு பழக்கமான கதாபத்திரங்களில் இருந்து என் ரோல் வேறுபட்டிருக்கும். விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியான விஷயம். அவர் ரொம்பவும் இயல்பாகவும் ரிலாக்ஸான மனிதராக இருக்கிறார்" எனப் பாராட்டுகிறார்.

image

"மக்கள் பலரும் கமல் மகளாக இருந்துகொண்டு எப்படி சினிமா பற்றி தெரியாமல் இருக்கும் என்று நினைக்கிறார்கள். நான் எப்போதாவதுதான் படப்பிடிப்புகளுக்குச் சென்றிருக்கிறேன். நான் சினிமா உலகை புரிந்துகொள்ளவில்லை. எனக்காக பரிந்துரை செய்யுங்கள் என்று அப்பாவிடம் கேட்டதுமில்லை " என்று நினைவுகூரும் ஸ்ருதிஹாசன், "சினிமாவில் கதாநாயகிகளுக்கு அதிகம் ஊதியம் வழங்குவதில்லை. நடிகர் - நடிகைகளுக்கான ஊதிய இடைவெளி மிகப் பெரியதாக உள்ளது. அதில் மாற்றம் வருவதற்கு இன்னும் இருபது ஆண்டுகள் பிடிக்கும்" என்றார்.


Advertisement

ஐபிஎல் 2020: ஹைதராபாத் - பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை..!

loading...

Advertisement

Advertisement

Advertisement