ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ ஷூட்டிங்: ஆலியா பட் எப்போது கலந்துகொள்கிறார் தெரியுமா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் ஷூட்டிங் தற்போது துவங்கியுள்ள நிலையில், நடிகை ஆலியா பட் நவம்பரில் கலந்துகொள்ளவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.


Advertisement

’மஹதீரா, நான் ஈ, பாகுபலி படங்களின் மூலம் தமிழ், தெலுங்கு, இந்தி பட ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி. இவரது இயக்கத்தில் வெளியான பாகுபலி இந்தியா மட்டுமல்லாது உலகளவில் வசூல் சாதனை செய்தது.

image


Advertisement

உலக இயக்குநர்களுக்கே தொழில்நுட்பத்தில் சவாலாய் அமைந்தது பாகுபலி. இவரது அடுத்தப்படமான ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரணுடன் பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கானும், நடிகை ஆலியா பட்டும்  நடிக்கவிருக்கிறார்கள்.

 image

 


Advertisement

கொரோனா சூழலால் தடைப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபத்தில் மீண்டும் துவங்கியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஆலியா பட் ஹீரோயினாக நடிப்பதால், அவரதுக் காட்சிகள் ஹைதராபாத், புனே, குரஜாத்தில் எடுக்க திட்டமிடப்பட்டிருந்தது.

image

ஆனால், கொரோனாவால் படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டதால் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியிலேயே ஆலியா பட் காட்சிகளை எடுக்கவுள்ளது படக்குழு. வரும் நவம்பர் முதல் வாரத்தில் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement