சாலையில் படுத்திருந்த சிங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்திய வனக்காவலர்.!

Watch--Lion-in-middle-of-road-in-Gujarat--caught-on-camera-by-forest-guard

குஜராத்தின்  கிர் வனப்பகுதியில்  சாலையின் நடுவில் படுத்திருக்கும் சிங்கத்திடம் ஒரு வனக்காவலர்   ‘கோரிக்கை வைத்து’ பேசும் வீடியோ வைரலாகியுள்ளது.


Advertisement

குஜராத் கிர்காடுகளில் பணி முடித்து இரவில் வீடு திரும்பும்  வழியில்  வன காவலர்  சிங்கத்தை  எதிர்கொண்ட சம்பவம் ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது. வனக்காவலர்  மகேஷ் சோண்டர்வா  செல்லும் வழியை வழியைத் தடுத்து, அந்த சிங்கம் இருண்ட  சாலையின் நடுவில் அமர்ந்திருக்கிறது. முதுகுத்தண்டை சில்லிடவைக்கும் இந்த  சம்பவத்தை  மகேஷ் சோண்டர்வா வீடியோவாக எடுத்துள்ளார். இந்த  வீடியோவில், வன காவலர் குஜராத்தி மொழியில் சிங்கத்திடம் கோரிக்கைவைத்து ‘கெஞ்சுவது’ பதிவாகியுள்ளது. சோண்டர்வாவின் பல முயற்சிகளுக்குப் பிறகு, சிங்கம்  மெதுவாக எழுந்து சென்று காட்டுக்குள்  நுழைந்தது  தெரிகிறது.


Advertisement

இந்த வீடியோவை இந்திய வன சேவை (ஐஎஃப்எஸ்) அதிகாரி டாக்டர் அன்சுமான் தனது ட்விட்டர்  பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement