மூன்றாவது வெற்றியை பதிவு செய்யுமா சிஎஸ்கே ? இன்று கொல்கத்தாவுடன் மோதல் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Advertisement

அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. தோனி தலைமையிலான சென்னை அணி விளையாடிய 5 போட்டிகளில் இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.

image


Advertisement

இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் சென்னை அணி 13 போட்டிகளிலும், கொல்கத்தா அணி ‌7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ‌ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. முந்தைய போட்டியில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது சென்னை அணி. கடைசி போட்டியில் போராடி தோல்வி கண்டுள்ளது கொல்கத்தா அணி. இவ்விரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

ஹாட்ரிக் தோல்விகளுக்கு அட்டகாசமான வெற்றி மூலம் பதிலளித்துள்ள உற்சாகத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். பேட்டிங்கில் தொடக்க வீரர் வாட்சன் ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு யானை பலம். அபரிமிதமான ஃபார்மில் உள்ளார் டூபிளசி. அம்பத்தி ராயுடு, கேப்டன் தோனி ஆகியோர் பேட்டிங்கில் நம்பிக்கையளிக்கின்றனர். ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா மற்றும் சாம் கரணின் ஃபார்ம் மத்திய வரிசையில் கூடுதல் பலம். பந்து வீச்சில் பிராவோ, தீபக் சாஹர் ஆறுதல். சர்துல் தாகூர், பியுஷ் சாவ்லா ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் ரன்களை வாரி வழக்குவது பலவீனம். கேதார் ஜாதவின் மோசமான ஃபார்ம் பேட்டிங் வரிசையில் சிறு பின்னடைவே. இன்றைய போட்டியில் இளம் வீரர் ஜெகதீசனுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image


Advertisement

டெல்லி அணியுடன் போராடி தோல்வி அடைந்த விரக்தியில் உள்ளது கொல்கத்தா அணி. பேட்டிங்கில் கில், ரானா, மார்கன், திரிபாதி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் சுனில் நரைனின் பொறுப்பான பங்களிப்பின்மை அணிக்கு பெரும் பின்னடைவு. ஆல்ரவுண்டர் ரசல் எதிர்பார்த்த அளவு ஆட்டத்தை வெளிப்படுத்தாதது பலவீனம். பந்து வீச்சில் இளம் வீரர்கள் மாவி, நகர்கோட்டி ஆகியோர் நம்பிக்கையளிக்கின்றனர். சுழற்பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தில் கூடுதல் பலம். அனுபவ வீரர் பேட் கம்மின்ஸ் ஃபார்மை இழந்துள்ளது பெரும் பின்னடைவு.

வெற்றிப்பாதையில் தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ள சென்னை மற்றும் வெற்றி முகத்திற்கு திரும்ப வேண்டிய அழுத்தத்தில் உள்ள கொல்கத்தா அணிகளிடையிலான பலப்பரீட்சை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement