ஒரு சீட் விட்டு ஒரு சீட்... தியேட்டர் திறப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ளார். கொரோனா பொது முடக்கத்தால் 6 மாதங்களுக்கு பிறகு, வரும் 15ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு ஏற்கெனவே அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் சில நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத்தான் இயங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.


Advertisement

image

  • 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் இயங்க வேண்டும் என்றும், ஒரு இருக்கை இடைவெளிவிட்டு ஒரு இருக்கையில் அமரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • 24 முதல் 30 டிகிரி வரை மட்டுமே ஏ.ஸியை இயக்கவேண்டும் எனவும், எந்தவித அறிகுறியும் இல்லாதவர்களை மட்டுமே தியேட்டரில் அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
  • அனைவரும் மாஸ்க் அணிந்தபடியே படம் பார்க்கவேண்டும் எனவும், இடைவேளையின் போது எழுந்து செல்வதை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள் மட்டுமே விநியோகிக்கப்படவேண்டும்.
  • டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதையும், ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் வாங்குவதையும் ஊக்குவிக்க வேண்டும். டிக்கெட் கவுண்டர்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க முன்பதிவுக்கு அனுமதிக்க வேண்டும் எனவும் மத்திய ‌அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • தேவையான இடங்களில் கை கழுவும் சோப் மற்றும் சானிடைசர்களை வைக்கவேண்டும் எனவும், ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் கிருமிநாசினி கொண்டு திரையரங்கை தூய்மைப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் - மு.க. ஸ்டாலின் கடிதம் 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement