இன்றைய ஐபிஎல் போட்டிகளில் மோதும் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளின் பலம் பலவீனம் குறித்த அலசல்
மறு கட்டமைப்பு செய்யப்பட்ட புதிய அணியுடன் நடப்பு சீசனை அடுத்தடுத்த வெற்றிகளுடன் தொடங்கியுள்ள டெல்லி அணி, கடைசியாக விளையாடிய ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சறுக்கலைச் சந்தித்துள்ளது. தவன், ஷா, ஸ்ரேயஸ் அய்யர், ரிஷப் பந்த் ஆகியோர் மேல் வரிசையில் பெரும் நம்பிக்கையளிக்கின்றனர். அதிரடி வீரர் ஹெட்மெய்ர் பெரியளவில் ரன்களைச் சேர்க்க தவறி வருவது அணிக்கு பின்னடைவு. ஸ்டாய்னிஸின் ஃபார்ம் மத்திய வரிசையில் ஆறுதல் அளிக்கிறது. பந்து வீச்சில் தென்னாப்ரிக்க வேகப்புயல்கள் ரபாடா மற்றும் நாட்ஜ் ஆகியோர் எதிரணியினருக்கு நெருக்கடி கொடுக்கும் அஸ்திரங்களாக உள்ளனர். அக்ஸர் படேல் மற்றும் அமித் மிஸ்ரா சுழற்பந்து வீச்சின் மூலம் வலு சேர்த்து வருகின்றனர்.
அடுத்தடுத்த இரு வெற்றிகளால் உத்வேகம் பெற்றுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. பேட்டிங்கில் சுப்மன் கில், ரானா, மார்கன் ஆகியோர் பெரும் பலமாக உள்ளனர். கேப்டன் தினேஷ் கார்த்திக், தொடக்க வீரர் சுனில் நரைன் ரன் சேர்க்க திணறுவது அணிக்கு பின்னடைவே. ஆல்ரவுண்டர்கள் ரசல் மற்றும் கம்மின்ஸ் சராசரியான ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு பக்க பலம். பந்து வீச்சில் இளம் வீரர்கள் ஷிவம் மாவி, நாகர் கோட்டி ஆகியோர் நம்பிக்கை நட்சத்திரங்களாக உருவெடுத்துள்ளனர். சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ரன் வேகத்தை கட்டுப்படுத்தும் அஸ்திரமாக வலம் வருகிறார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் விக்கெட்டுகளைச் சரிக்க தவறுவது அணிக்கு பின்னடைவு.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்