மத்தியபிரதேசம்: வீட்டில் இருந்த சிறுமி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை.

Three-Men-Allegedly-Kidnap--Gang-Rape-Minor-In-MP---s-Khargone

மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில், 16 வயது சிறுமியை அவரது வீட்டில் இருந்து கடத்திய பின்னர் மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக மத்திய பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.


Advertisement

image

மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில், 16 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டில் இருந்து கடத்தப்பட்ட பின்னர் அடையாளம் தெரியாத மூன்று நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சிறுமியை கடத்தியபோது தடுத்த சகோதரரையும் அந்த நபர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர், பின்னர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.


Advertisement

கார்கோன் காவல்துறை கண்காணிப்பாளர் ஷைலேந்திர சிங் சவுகான் “அந்த சிறுமி தனது சகோதரருடன் கிராமத்திற்கு அருகிலுள்ள விவசாய வயலில் குடிசை அமைத்து வசித்து வந்தார், அங்கு அவர்கள் விவசாய தொழிலாளர்களாக வேலை செய்தனர், இவர்களின் பெற்றோர்கள் வேறு கிராமத்தில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று அடையாளம் தெரியாத மூன்று ஆண்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து சிறுமியை குடிசையிலிருந்து வெளியே இழுத்துச் சென்றனர். இதனை எதிர்த்த சகோதரரையும் தாக்கியுள்ளனர்” என்று தெரிவித்தார்

image

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸைச் சேர்ந்த 19 வயது பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த நிகழ்ச்சி நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் சூழலில் இந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.


Advertisement

 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement