2வது நாளாக ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.


Advertisement

image

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வந்த வண்ணம் இருக்கின்றன. இதுகுறித்த முடிவு அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக நிர்வாகிகள் முதலமைச்சரையும் துணை முதலமைச்சரையும் தனித்தனியாக அவர்களது இல்லத்தில் சந்தித்து  ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


Advertisement

 நேற்று, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் முதலில் ஓபிஎஸ்சை சந்திந்துவிட்டு பின்னர் ஈபிஎஸ்சை சந்தித்து பேசினார். அதனைதொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை,  சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று நத்தம் விஸ்வநாதன் மகள் முதலமைச்சரை சந்தித்திருந்தார்.

 செயற்குழு கூட்டம் முடிந்த நிலையில் இராண்டாவது நாளாக தனது ஆதரவாளர்களுடன் பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement