தெலுங்கு படப்பிடிப்பில் கலந்துகொண்ட சோனு சூட்டை, அதே படத்தில் நடிக்கும் பிரகாஷ் ராஜ் பொன்னாடைப் போர்த்தி கைத்தட்டி பாராட்டியுள்ளார்.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தீடீரென அறிவிக்கப்பட்டதால் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களை பேருந்துகள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பேருதவி செய்தார் வில்லன் நடிகர் சோனு சூட். ’படத்தில்தான் அவர் வில்லன் நடிகர். ஆனால், நிஜத்தில் ஹீரோ’ என்று இந்திய மக்களால் பாராட்டப்படுகிறார். அதேபோல, ட்விட்டரில் தன்னிடம் கோரிக்கை வைப்பவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
கடந்த ஆறு மாதமாக உதவி செய்து வந்தவர், தற்போது தெலுங்கு படமான ’அல்லு ஆதர்ஸ்’ பட ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் வந்துள்ளார். இப்படத்தில், நம்ம வீட்டுப் பிள்ளை ஹீரோயின் அனு இம்மானுவேல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் பலர் நடிக்கிறார்கள். இந்நிலையில், மும்பையில் இருந்து ஹைதராபாத் வந்து ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு சோனு சூட் நுழைந்தபோது, அவரின் சமூக சேவைகளுக்காக பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட மொத்த யூனிட்டினரும் மனம் திறந்து கைத்தட்டி பாராட்டியுள்ளனர்.
பிரகாஷ் ராஜ் அவர் வேஷ்டி சட்டை அணிந்துகொண்டு, அவர் நடிக்கும் கெட்டப்பிலேயே சோனுசூட்டிற்கு பொன்னாடையையும் பூச்செண்டையும் அளித்து கெளரவித்துள்ளார். அவர் பாராட்டிய புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
Loading More post
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?