ஐபிஎல் 2020: டெல்லி - ஹைதராபாத் இன்று மோதல்!

Sunrisers-hyderabad-facing-Delhi-Capitals-today-in-IPL

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ‌சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Advertisement

அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி விளையாடிய இரு போட்டிகளிலும் வென்ற உற்சாகத்தில் உள்ளது. விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ள ஹைதராபாத் அணி, வெற்றி முகத்திற்கு திரும்ப தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது.

image


Advertisement

இவ்விரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் ‌ஹைதராபாத் அணி 9 போட்டிகளிலும், டெல்லி அணி 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ‌டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் பலம் பலவீனம் குறித்து பார்க்கலாம்.

விளையாடிய இரு போட்டிகளில் கண்ட தோல்விகளால் துவண்டுள்ளது ஹைதராபாத் அணி. பேட்டிங்கில் கேப்டன் வார்னர், மணீஷ் பாண்டே மற்றும் பேர்ஸ்ட்டோவ் மட்டுமே நம்பிக்கை தூண்களாக உள்ளனர். மூத்த வீரர் கேன் வில்லியம்சன் களமிறக்கப்படாமல் இருப்பது அணிக்கு பின்னடைவே. மத்திய வரிசையில் நிலைத்து நின்று அதிரடி காட்ட வலுவான ஒரு HITTER ஹைதராபாத் அணியில் இல்லை. ஆல்ரவுண்டர்கள் நபி மற்றும் ரஷீத் கான் அதிரடி ரோலை பூர்த்தி செய்வார்கள் என நம்பப்படுகிறது. பந்துவீச்சில் புவ்னேஷ்வர் குமார் மற்றும் நட்ராஜ் பக்கபலமாக உள்ளனர்.

image


Advertisement

விளையாடிய இரு போட்டிகளிலும் வென்ற உற்சாகத்தில் உள்ளது டெல்லி அணி. பேட்டிங்கில் தவன், ஷா, பந்த், ஸ்ரேயஸ் அய்யர், ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸ் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்து வீச்சிலும் டெல்லி அணி நல்ல ஃபார்மிலேயே உள்ளது. வேகப்பந்து வீச்சில் தென்னாப்ரிக்க SEAMERகள் ரபாடா மற்றும் நாட்ஜ் எதிரணியினரை திணறடித்து வருகின்றனர். பேட்ஸ்மன்களுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில் சுழற்பந்து வீச்சாளர்கள் அமித் மிஸ்ரா மற்றும் அக்ஸர் படேல் அருமையான ஃபார்மில் உள்ளனர். மூத்த ஸ்பின்னர் அஸ்வினும் அணிக்கும் திரும்பினால் டெல்லி மேலும் வலுப்பெறும். மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் மட்டும் சரியாக அமையாமல் உள்ளது டெல்லி அணிக்கு பலவீனம்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement