ஒடிசாவில் கொரோனாவுக்கு போலி தடுப்பூசி தயாரித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு இன்னும் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரவில்லை. அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகளே தடுப்பூசி தயாரிப்பில் இறுதிக்கட்டக் கண்டுபிடிப்பில் உள்ளன. இந்தியாவிலோ ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனோ மருந்து நிறுவனம் ஆகியற்றால் உருவாக்கப்பட்டுள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பரிசோதனையில்தான் இருக்கிறது.
கொரோனாவால் அமெரிக்காவில் மட்டுமே 2 லட்சம் பேர் இறந்துள்ளார்கள். இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 90 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். ஆனால், இன்னும் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரவில்லை.
கைப்பற்றப்பட்ட போலி தடுப்பூசிகள்
இந்நிலையில், ஒடிசாவின் பர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரஹல்லாத் என்ற 32 வயது இளைஞர் கொரோனா தடுப்பூசி மையத்தை ஏற்படுத்தி போலியாக கொரோனா தடுப்பூசி என்ற ஸ்டிக்கருடன் என்று பெயரிட்டு தயாரித்து வந்துள்ளார். இதனை கண்டுபிடித்த காவல்துறை அதிகாரிகள் அந்த நபரை கைது செய்துள்ளனர். இதில், ஆச்சர்யம் என்னவென்றால் கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரித்த பிரஹல்லாத் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கிறார்.
Loading More post
மார்ச் 10-ல் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல் : மு.க.ஸ்டாலின் தகவல்
3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்; நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
"சுப்மன் கில் சரியாக விளையாட முடியாததற்கு இதுதான் காரணம்"-சுனில் கவாஸ்கர்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் உயிரிழப்பு
தமிழகத்தில் ராகுல் பரப்புரைக்கு தடை கேட்கும் பாஜக
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை