"பாடும் நிலா விண்ணிலிருந்து பாடட்டும்"மறைந்த எஸ்.பி.பிக்கு நயன்தாரா அஞ்சலி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு நடிகை நயன்தாரா அஞ்சலி செலுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Advertisement

பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று காலமானார். தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் அவரது உடலுக்கான இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து அவரது உடலானது அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. நல்லடக்கத்தின் போது 24 காவலர்கள் மூன்று முறை வானத்தை நோக்கிச் சுட்டு 72 குண்டுகள் முழங்க மரியாதை செய்தனர்.

image


Advertisement

இந்நிலையில் நடிகை நயன்தாரா எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ தெய்வீக குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. அவர் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. ஆனால் உங்கள் குரல் நீங்கா புகழுடன் இருக்கும். நாங்கள் ஆறுதல் சொல்லிக்கொள்ளும் இந்த நேரத்தில் கூட உங்கள் பாடல் மட்டுமே பொருந்துகிறது.

நீண்ட காலமாக இடைவிடாமல் உழைத்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மனம் இல்லாமல் பிரியா விடைகொடுக்கிறோம். பாடும் நிலா விண்ணிலிருந்து பாடட்டும். உங்களை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் உங்கள் திரை உலக சகாக்களுக்கும் ரசிகர்களுக்கும் எனனுடைய மனமார்ந்த ஆறுதல்” என அதில் குறிப்பிட்டுள்ளார்

loading...

Advertisement

Advertisement

Advertisement