நீதிபதியின் உடலுக்கு புஷ் அப்ஸ் எடுத்து மரியாதை செலுத்திய உடற்பயிற்சியாளர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க் இறந்ததையடுத்து அவரது உடற்பயிற்சியாளர் அவரது சடலத்தின் முன்னர் புஷ் அப்ஸ் எடுத்து இறுதி அஞ்சலி செலுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement

image

அமெரிக்காவின் முதல் பெண் நீதிபதியாக பதவியேற்றவர் ரூத் பேடர் கின்ஸ்பர்க். இவர் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை அவரது உடலானது வெள்ளிமாளிகையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு அஞ்சலி செலுத்த வந்த ரூத் பேடர் கின்ஸ்பர்கின் பிரேத்யக உடற்பயிற்சியாளர் பிரையன்ட் ஜான்சன் புஷ் அப்ஸ் எடுத்து அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

சில ஆண்டுகளுக்கு முன்னர் ரூத் பேடருக்கு பிரேத்யக உடற்பயிற்சியாளராக மாறிய பிரையன்ட் ஜான்சன், ஊரடங்கு நாட்களிலும் ரூத் பேடருக்கு உடற்பயிற்சிகளை வழங்கி அவரது உடல் கட்டுக்கோப்பாக இருக்க உதவிகரமாக இருந்தார். 2017 ஆம் ஆண்டு பிரையன்ட் ஜான்சன், ரூத் பேடர் கின்ஸ்பர்க்கான உடற்பயிற்சிகளை புத்தகமாக தொகுத்தார்.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement