பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்துவருகிறார். தற்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், எஸ்பிபி நலம்பெறவேண்டி பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர்.
பாலிவுட் ஸ்டார் சல்மான்கான் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார். தன் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தனக்காகப் பாடிய ஒவ்வொரு பாடல்களுக்காகவும் நன்றி தெரிவித்துள்ளார். "பாலசுப்ரமணியம் சார்... நீங்கள் விரைவில் நலமடைய வேண்டும் என்பதற்கான வாழ்த்துகளை என் இதயத்தின் அடியாழத்தில் இருந்து கூறுகிறேன்.எனக்காகப் பாடிய ஒவ்வொரு பாடலுக்காகவும் நன்றி கூறுகிறேன். ஸ்பெஷலாக தில் திவானா.... லவ் யூ சார் " என்று சல்மான் பதிவிட்டுள்ளார்.
90களில் சல்மான்கானுக்கான எஸ்பிபியின் குரல் பிரபலமாகப் பேசப்பட்டது. 1989ம் ஆண்டில் வெளியான மைனோ பியார் க்யா படத்தின் வெற்றிக்குப் பிறகு சில ஆண்டுகள் நிரந்தரமாக சல்மான்கானுக்காக எஸ்பிபி பாடிவந்தார். அதைத் தொடர்ந்து வந்த ஹம் ஆப்கே ஹைன் கோன், லவ், சாஜன், அந்தாஸ் அப்னா அப்னா உள்ளிட்ட பல படங்களில் அவர் பாடியுள்ளார். இந்தப் பாடல்கள் அனைத்தும் பாலிவுட் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்டன.
துயரமான நாட்களில் இருந்து எஸ்.பி.பி மீண்டுவர வாழ்த்துவதாக இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி குணமடைய வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக நடிகர் பிரசன்னாவும், மனம் உருகி வேண்டுவதாக பாடகர் க்ரிஷும் தெரிவித்துள்ளனர்.
எஸ்.பி.பி குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள் என இசையமைப்பாளர் தமன் கேட்டுக்கொண்டுள்ளார். எஸ்.பி.பி. சார் உங்களுக்காக வேண்டுகிறேன், விரைவில் வாருங்கள் என தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தெரிவித்துள்ளார். இதனிடையே பாடகர் எஸ்பிபி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் சென்ற சில ரசிகர்கள், விரைவில் அவர் குணமடைந்து வருவார் என நம்பிக்கை தெரிவித்தனர்.
Bala Subramaniam sir . All the strength hope wishes from the bottom of my heart to a speedy recovery n thank u for every song u sang fr me n made special your dil dewana hero prem, Love u sir. — Salman Khan (@BeingSalmanKhan) September 24, 2020
கூர்மையான பற்களை காட்டி பயமுறுத்திய சுறா - திகிலூட்டும் வீடியோ!
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை