எஸ்பிபி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்: கமல் மருத்துவமனை வருகை

Kamal-Haasan-has-gone-to-the-hospital-visit-SBP

பாடகர் எஸ்பிபி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என அறிவிப்பு வெளியாகிய நிலையில் அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நடிகர் கமல்ஹாசன் வருகை புரிந்துள்ளார்.


Advertisement

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் கொரோனா நோய் தொற்று காரணமாக பின்னணி பாடகர் எஸ்பிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து எக்மோ கருவி மற்றும் வெண்டிலேட்டர் கருவிகள் உதவிகளுடன் சிகிச்சைப்பெற்று வந்தார். தொடர்ந்து உடலில் முன்னேற்றம் ஏற்பட்டு சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா நெகட்டிவ் வந்தது.

Rajinikanth, Kamal Haasan, AR Rahman and others unite to pray for SP  Balasubrahmanyam's recovery from coronavirus | People News | Zee News


Advertisement

இதைத்தொடர்ந்து சில நாட்களாக உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சைப்பெற்று வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் எஸ்பிபியின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள நேரடியாக மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளார். மேலும், எஸ்பிபியின் மகன் சரணிடமும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிய உள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement