அக். 4 முதல் பிக்பாஸ் சீசன்-4 ஒளிபரப்பு: விஜய் டிவி அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழில் பெரும் வரவேற்பு பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 வரும் அக்டோபர் 4 முதல் ஒளிபரப்பவுள்ளதாக விஜய் டிவி தற்போது தெரிவித்துள்ளது.


Advertisement

இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என்று வெளியான எல்லா மொழிகளிலும் ஹிட் அடித்த நிகழ்ச்சி பிக்பாஸ். தமிழில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்தது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். பிக்பாஸ் சீசன் 4 கடந்த ஜூன் மாதமே தொடங்கவிருந்த நிலையில் கொரோனாவால் தடைபட்டது.

 image


Advertisement

சமீபத்தில் தமிழக அரசு விதிமுறைகளுடன் சின்னத்திரை படபிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியதால், பிக்பாஸ் 4 ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டு வந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வரும் அக்டோபர் 4 முதல் என்று கமல் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.

அக்டோபர் 4 ஆம் தேதி மட்டும் 6 மணிக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியை ஒளிபரப்பிவிட்டு, அடுத்த நாளான திங்கள் கிழமையிலிருந்து இரவு 9.30 மணிக்கு பிக்பாஸ் இல்ல நடவடிக்கைகள் ஒளிபரப்பாகும்’ என்று விஜய் டிவி அறிவித்துள்ளது. இதனால், பிக்பாஸ் பார்க்கும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.


Advertisement

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement