துரதிர்ஷ்டங்களை வென்று முதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Advertisement

துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. கோலி தலைமையிலான பெங்களூரு அணி முதல் போட்டியில் வென்ற உற்சாகத்திலும், ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி முதல் வெற்றியை பதிவு செய்யவும் ஆயத்தமாகி வருகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ‌பெங்களூரு அணி 12 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ‌

image


Advertisement

ஐபிஎல் தொடரில், இன்றைய ஆட்டத்தில் மோதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளின் பலம் பலவீனம் குறித்து பார்க்கலாம். சூப்பர் ஓவர் வரை சென்றும் தோல்வி, தோல்விக்கு பின் வெடித்த 'ஒரு ரன்' சர்ச்சை என களமிறங்கிய முதல் போட்டியிலேயே துரதிர்ஷ்டங்களை சந்தித்துள்ளது பஞ்சாப் அணி.

நம்பிக்கை நட்சத்திரங்கள் கே.எல்.ராகுல், கருண் நாயர், மேக்ஸ்வெல், பூரன்ஆகியோர் முதல் போட்டியில் சோபிக்காதது பஞ்சாப் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேல்வரிசையில் மயங்க் அகர்வால் ஃபார்மில் உள்ளது அணிக்கு ஆறுதல். முதல் போட்டியில் ரன்களை வாரி வழங்கிய ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டன் அல்லது பூரன் இன்றைய போட்டியில் களமிறக்கப்படமாட்டார்கள் எனத் தெரிகிறது. பந்துவீச்சாளர்கள் காட்ரெல், ஷமி, ரவி பிஷ்ணோய் ஆகியோர் ஃபார்மில் உள்ளது அணிக்கு பெரும் பலம்.

image


Advertisement

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சமரசமில்லாத வெற்றியைப் பதிவு செய்த உற்சாகத்தில் உள்ளது பெங்களூரு அணி. தேவ்தத் படிக்கல், ஃபின்ச் , அதிரடி மன்னன் டிவில்லியர்ஸ் ஆகியோரின் ஃபார்ம், அணிக்கு பேட்டிங்கில் பலம் சேர்த்துள்ளது. கேப்டன் விராட் கோலி முதல் போட்டியில் சோபிக்காதது சிறு பின்னடைவு. பந்துவீச்சாளர்கள் உமேஷ் யாதவ், ஸ்டெய்ன் ஆகியோர் கடந்த சீசன்களைப் போலவே இப்போதும் ரன்களை அதிகளவில் விட்டுக் கொடுத்துள்ளது அணிக்கு பலவீனம்.

இருப்பினும் ஆட்டத்தின் போக்கையே மாற்றிய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் மற்றும் சைனியின் ஃபார்ம் எதிரணியை அச்சுறுத்தும் என்பதில் ஐயமில்லை. பஞ்சாப் அணி வீரர்கள் பேட்டிங்கில் மீட்சி பெறும் பட்சத்தில் இன்றைய ஆட்டம் பெங்களூரு அணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement