ரூ. 500 திருடியதாக சிறுவனை அடித்து கொலை செய்த நண்பனின் தாய்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் ரூ. 500 திருடியதாக 14 வயது சிறுவன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் கியாபனோபோஷி என்ற கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ராஜன் பெஹெரா. இவன் தனது நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இதையடுத்து ராஜன் நண்பரின் தாய் சஸ்மிதா பெஹெரா (36) வீட்டில் 500 ரூபாய் காணாமல் போனதை கண்டறிந்துள்ளார். இதுகுறித்து முதலில் அந்த பெண் அவரது மகனிடம் கேட்டார். பின்னர், அந்த பெண் இல்லாத நேரத்தில் வந்து சென்ற ராஜன் பெஹெராவை அழைத்து விசாரித்தார். அப்போது சிறுவனை அந்தப் பெண் குச்சியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ராஜன் வீடு திரும்பிய பின்னர் காயங்கள் காரணமாக உயிரிழந்தார்.


Advertisement

இதுகுறித்து கிராம மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement