மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனாவுக்கு உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். முதன்முறையாக மத்திய இணையமைச்சர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.


Advertisement

மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார். கர்நாடக எம்.பிக்கள் அவரது வீட்டிற்கு விரைந்துள்ளனர். 

65 வயதான சுரேஷ் அங்கடி கர்நாடகாவின் பெலகாவிலிருந்து 4 வது முறையாக மக்களவைக்கு தேர்வாகியிருந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் 4வது எம்.பி ஆவார். ஏற்கெனவே வசந்தகுமார்(தமிழகம்), துர்கா பிரசாத் (ஆந்திரா), அசோக் கஸ்தி(கர்நாடகா) ஆகியோர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement