ஸ்டேடியத்துக்கு வெளியே ரோட்டில் விழுந்த பந்து.. கடுப்பேற்றி பின் கூல் ஆக்கிய தோனி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அடித்த பந்து ஸ்டேடியத்துக்கு வெளியே சென்று சாலையில் விழுந்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


Advertisement

2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதிலிருந்து சிஎஸ்கே அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்று தோனி செயல்பட்டு வருகிறார். எப்போதும் கூலாக இருக்கும் தோனிக்கு கூல் கேப்டன் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்திய அணியில் இருந்து விலகிய தோனி கிட்டதட்ட ஒருவருடத்திற்கு பின்பு ஐபிஎல் மூலம் களத்திற்கு வந்தார். அதனால் தோனியின் ஆட்டம் குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் சற்றும் குறையாமல் எக்குத்தப்பாக எகிறியே கிடந்தது. அதற்கு ஏற்றார்போல் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பயிற்சி செய்யும் வீடியோக்கள் அவ்வபோது வெளிவந்த வண்ணம் இருந்தன.

image


Advertisement

பயிற்சி ஆட்டத்தில் அவர் சிக்ஸர்களாக பறக்கவிட்டுக் கொண்டிருந்தார். அந்த வீடியோக்களை கண் குளிர பார்த்த ரசிகர்கள் தோனியின் அதிரடியை மைதானத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். மேலும், தோனிக்கு வயதாகிவிட்டது. முன்பு போல் ஆடமாட்டார். பழைய பிட்னஸ் அவரிடம் இல்லை என்பது போன்ற பல விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பார் என ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையோடு அமீரக மைதானங்கள் மேல் விழிவைத்து காத்திருந்தனர்.

IPL 2020 in UAE: Chennai Super Kings defeat Rajasthan Royals in pictures |  Sports-photos – Gulf News

இதைத்தொடர்ந்து, மும்பை அணியுடனான முதல் ஐபிஎல் போட்டியில், தோனி எதிர்பார்த்த இடத்தில் இறங்கவில்லை. அவருக்கு பின்பாக இருந்த சாம் கர்ரன் போன்ற இளம்வீரர்களை இறக்கிவிட்டு அதிரடி காட்ட வைத்தார். கடைசியாக பெயரளவில் இறங்கி களத்தில் நின்றார். சென்னை அணி அந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றிருந்தாலும், தோனியின் அதிரடி ஆட்டத்தை அவரது ரசிகர்களால் காண முடியாமல் போய்விட்டது. அதுவும் சந்தித்த முதல் பந்திலே அம்பயரால் அவுட் கொடுக்கப்பட்டது. பின்னர், தோனி ரிவிவ் கேட்க அது அவுட் இல்லை என்பது தெரிய வந்த போதுதான் ரசிகர்களுக்கு மூச்சே வந்தது. பின்னர் தோனி வழக்கம் போல் தற்போதும் டிஆர்எஸ் கிங் தான் என பாராட்டினர்.


Advertisement

MS Dhoni discloses why he batted at Number 7 vs Rajasthan Royals in IPL  2020 | The SportsRush

இந்த நிலையில்தான், ஐபிஎல் தொடரின் 4வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இந்தத் தொடரில் முதல் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 216 ரன்கள் குவித்தது. இதில் சஞ்சு சாம்சன், ஸ்மித் போன்ற வீரர்கள் அதிரடியாக ரன்களை குவித்தாலும் கடைசி ஓவரில் ஆர்ச்சர் பந்துகளை சிக்ஸர் லைனுக்கு பறக்க விட்டார்.

இதைத்தொடந்ந்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பத்தில் நன்றாக விளையாடினாலும், மிடில் ஆர்டரில் வீரர்கள் சொதப்பினர். அடுத்தடுத்து வீரர்கள் அதிரடி காட்டுவதற்காக இறங்கி அடிக்க ஆசைப்பட்டு அவுட்டாகினர். ஆனால் டூப்ளிசி மட்டும் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் அதிரடி காட்டி 37 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார்.

Indian Premier League 2020: Rajasthan Royals complete comprehensive 16-run  victory over Chennai Super Kings in a match which saw a record-equaling 33  sixes | Cricket News | Zee News

இதனிடையே ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த கூல் கேப்டன் தோனி கடைசி ஓவருக்கு முந்தைய ஓவர் வரை சரியாக அடிக்கவில்லை. அவுட் ஆகிவிடக்கூடாது என்ற முனைப்போடு விளையாடினார். இதனால் வீட்டில் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்த ரசிகர்கள் கூட கடுப்பாகியிருப்பர் என்றே சொல்லலாம். டூப்ளிசி அவுட் ஆகும் வரை ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. ஏன் பவுண்டரி கூட அடிக்காமல் சிங்கிள் ரன்களாக அடித்துக் கொண்டிருந்தார். தோனி சிங்கிள் சிங்கிளாக அடிக்க அவரது ரசிகர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர். இதனால் மிகவும் அதிருப்தியில் இருந்த ரசிகர்களுக்கு கடைசி ஓவரில் தோனி வான வேடிக்கை காண்பிக்க ஆரம்பித்தார்.

image

கடைசி ஓவருக்கு 38 ரன்கள் எடுக்க வேண்டியிருந்ததால், சிஎஸ்கேவின் தோல்வி கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அதனால், எல்லா கோபமும் தோனியின் பக்கம் திரும்பியது. டுப்ளிசி இவ்வளவு அதிரடியாக ஆடியதற்கு தோனியும் இரண்டு மூன்று சிக்ஸர்கள் பறக்கவிட்டிருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்குமே என்று ரசிகர்கள் மனதிற்குள்ளே ஆதங்கப்பட்டார்கள். அதனை சமூக வலைத்தளங்களில் கொட்ட ஆரம்பித்தார்கள். ஆனால், அடுத்த 10 நிமிடங்களில் எல்லாமே தலைகீழாக மாறியது.

கடைசி ஓவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டாம் கர்ரன் வீசினார். கடைசி ஓவரின் முதல் பந்திலும் தோனி ஒரு ரன் மட்டுமே எடுத்தார். அடுத்த பந்திற்கு ஜடேஜா ஒரு சிங்கிளை எடுத்து கொடுத்தார். அதிலிருந்து தோனியின் சகாப்தம் ஆரம்பித்தது. 3வது பந்தில் தோனி சிக்ஸர் விளாசினார். அனைவருக்கும் பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிட்டது. ஏன் திடீரென்று ஆவேசம் என நினைத்துக் கொண்டிருக்கையில், அடுத்த பந்திலும் தோனி இமாலய சிக்ஸர் விளாசி ரசிகர்களை ஒரு நிமிடம் திக்குமுக்காட வைத்தார். அந்த பந்து ஸ்டேடியத்துக்கு வெளியே சென்று சாலையில் விழுந்தது. 92 மீட்டர் தூரம் அந்த பந்து பறந்தது என்றால் பாருங்கள். அனைவரும் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்தனர். இதுபோக கடைசி ஓவரின் 5வது பந்தையும் எல்லைக்கோட்டிற்கு வெளியே அனுப்பி ஹாட்ரிக் சிக்ஸை பதிவு செய்தார் தோனி.

இதையடுத்து சிஎஸ்கே அணி தோற்றாலும் தோனியின் சிக்ஸர் மழை ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்துவிட்டது. தோனி மீண்டு வந்துவிட்டார் என ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். ஹாட்ரிக் சிக்ஸர் மூலம் தன் மீதான கடுமையான விமர்சனங்களை மறையச் செய்துவிட்டார் தோனி. அத்துடன் சிஎஸ்கேவின் தோல்வியையும் மறக்கச் செய்துவிட்டார் என்றால் அது மறுக்க முடியாத உண்மைதான்.

loading...

Advertisement

Advertisement

Advertisement