மோசடி நபர் என்று எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மிகவும் காரசாரமாக பதிலளித்துள்ளார் நடிகர் சோனு சூட்.
நடிகர் சோனு சூட், கொரோனா பொது முடக்க காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கு உதவுவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தவர். மேலும் இவர் சமூகவலைதளங்கள் வழியே மக்களின் கோரிக்கையை கேட்டு பலருக்கும் வேலைவாய்ப்பையும், மருத்துவ உதவிகளையும் செய்துவருகிறார்.
இந்த நிலையில் இவர் ஒரு மோசடிபேர்வழி என்று பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். இதற்கு பதிலளித்த அவர் "நான் எதுவும் செய்யவில்லை என்று கூறுபவர்களுக்கு எனது பதில் என்னவென்றால், நான் உதவி செய்த 7,03,246 பேரின் தரவுகளும் என்னிடம் உள்ளது. அவர்களுடைய முகவரிகள், தொலைபேசி எண்கள், ஆதார் அட்டை எண்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன. வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிவர நான் உதவிய அனைத்து மாணவர்களின் விவரங்களும் என்னிடம் உள்ளன. இதை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை, ஆனால் என்னிடம் தரவுகள் உள்ளது. என்னை ட்ரோல் செய்வதற்கு பதிலாக, வெளியே சென்று யாராவது ஒருவருக்கு உதவுங்கள்” என்று கூறியுள்ளார்
மேலும் இப்போதுவரை தனக்கு அரசியலில் சேர எந்த திட்டமும் இல்லை என்றும் சோனு சூட் மீண்டும் தெளிவுபடுத்தி கூறியுள்ளார்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!