தாய் மனது தாங்குமா? குழந்தைகளுக்காக தனது உடல் உறுப்புகளை விற்க முன்வந்த தாய்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரளாவில் 44 வயதான ஒரு தாய், குழந்தைகளின் மருத்துவ செலவுகளுக்காக தனது அனைத்து உடல் உறுப்புகளையும் 20 இலட்சத்துக்கு விற்க முயன்ற சம்பவம் அதிர்சியூட்டியுள்ளது.  


Advertisement

image

கொச்சினை சேர்ந்த சாந்தி என்ற அந்த பெண்  “எனது குழந்தைகளுக்கு மருத்துவ வசதிக்காகவும் கடன்களை அடைக்கவும், தாயின் உடல் உறுப்புகள் விற்பனைக்கு (இதயம் உட்பட) ' என்று ஒரு பலகையில் எழுதி வைத்திருந்தார். சாந்தியின் மூத்த மகன்களில் இருவர் சாலை விபத்துக்களில் பலத்த காயம் அடைந்த நிலையில், அவரது மகள் நரம்பியல் நோயால் அவதிப்பட்டு வருகிறார், அது அவரது பார்வையையும் பாதித்துள்ளது. இதனால் அவர் இந்த முடிவினை எடுத்ததாக கூறப்படுகிறது.


Advertisement

கணவனிடமிருந்து பிரிந்ததாகக் கூறப்படும் அந்தப் பெண், கொச்சி நகரத்தின் புறநகரில் உள்ள வரப்புழாவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஆனால் தொடர்ந்து வாடகை செலுத்தமுடியாததால், அவர்கள் வீட்டை காலி செய்து சாலையோரத்தில் கூடாரம் அமைத்து வாழ்ந்துவந்தனர்.

image

சில லட்ச ரூபாய் கடன்பட்டுள்ளதாக கூறும் சாந்தி, “எனது மூன்று குழந்தைகளும் நோய்வாய்ப்பட்டதால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. எனக்கு வேறு வழிகள் இல்லை, எனவே நான் அத்தகைய பலகையை வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது யாருக்கும் எதிரான போராட்டம் அல்ல, உதவி வேண்டித்தான் இந்த பலகை வைத்துள்ளேன்" என்று அவர் கூறினார்.


Advertisement

இந்த விவகாரம் அரசாங்கத்தின் கவனத்திற்கு வந்தவுடன், அந்த குடும்பம் ஒரு காப்பகத்துக்கு மாற்றப்பட்டது மற்றும் குழந்தைகளின் சிகிச்சையை கவனித்துக்கொள்வதாகவும் மாநில அரசு உறுதியளித்தது. பின்னர் சில தன்னார்வ அமைப்புகளும் அவரது குடும்பத்தின் செலவுகளைச் சமாளிக்க முன்வந்துள்ளன. எனவே குடும்பத்தினர் தற்போது தங்கள் வாடகை வீட்டிற்கு தற்போது திரும்பியுள்ளனர்.வடக்கு கேரளாவைச் சேர்ந்த குடும்பத்தினர் சிறுமியின் நரம்பியல் சிகிச்சைக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு கொச்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இடையில், இரண்டு மூத்த மகன்களுக்கும் சாலை விபத்துக்களில் பலத்த காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யவேண்டிய  சூழலில் உள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement