2030ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை... இங்கிலாந்து திட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

2030-ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் எரிபொருள் வாகனங்களுக்கு தடைவிதிக்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

image

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் மின்சார வாகனங்களுக்கான உற்பத்தி மற்றும் திட்டங்கள் பற்றி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து பசுமையான பொருளாதாரத்தை மீட்க, புதிய எரிசக்தி கொள்கைகளின் அடிப்படையில் இந்த திட்டம் வடிவமைக்கப்படுகிறது. எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் தொழில்களின் வட்டார தகவல்களின்படி “இந்த வார தொடக்கத்தில் இது தொடர்பான திட்டங்களை வகுக்க அரசாங்கம் நம்பியிருந்தது. ஆனால் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு இறுதிவரை அறிவிப்பு தாமதமாகலாம்” என்று கூறுகிறது.


Advertisement

2035க்குள் புதிய மாசுபடுத்தும் வாகனங்களின் விற்பனை தடைக்கான காலக்கெடுவை நிர்ணயிக்கும் திட்டங்கள் குறித்து அரசாங்கம் முன்பு ஆலோசனை நடத்தியது. மின்சார கார்களுக்கான மாற்றத்தை சமாளிக்கும் வகையில் இங்கிலாந்தின் உள்கட்டமைப்பு தயாராக இருக்கும் என்ற உறுதிமொழியைத் தொடர்ந்து இப்போது தீவிரமாக இந்த முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .

2030 க்குள் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் விற்பனையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பிரிட்டனுக்கு முன்பாகவே பிரான்ஸ் அரசு முடிவெடுத்தது. ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் 2040க்குள் இந்த எரிபொருள் வாகனங்களை தடைசெய்ய முடிவெடுத்துள்ளது, நார்வே 2025 க்குள் இந்த தடையை கொண்டு வருகிறது. 2050 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை முற்றிலுமாக குறைக்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் வீடுகள் மற்றும் கனரக தொழில்துறையிலிருந்து கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க உதவும் இங்கிலாந்தின் புதிய சுத்தமான ஹைட்ரஜன் தொழிலுக்கு காலநிலை மாற்றத்திற்கான குழு வழங்கிய ஆலோசனை பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement