ஓ.பி. ரவீந்திரநாத் நாடாளுமன்றத்தில் புதிய உறுப்பினர் என்பதால் விவசாய மசோதாவை ஆதரித்து பேசினார் என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விவசாயிகள் மசோதாவில் உள்ள குறைகளை மாநிலங்களவையில் தெரிவித்தேன். குறைகளை தெரிவிப்பது எங்களுடைய உரிமை. புதிய உறுப்பினர் என்பதால் மக்களவையில் விவசாயிகள் மசோதாவை ஓ.பி.ரவீந்திரநாத் ஆதரித்து பேசினார். அதனால் நானும் அதை ஆதரிக்க வேண்டும் என்று அவசியமில்லை.
மசோதாவில் சில அம்சங்களை எதிர்த்து விட்டு ஆதரிக்கக்கூடாது என்று எதுவும் கிடையாது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி துரதிர்ஷ்டவசமானது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும். ஸ்டாலின் வெற்றி பெற வாய்ப்பில்லை. அதிமுக., பாஜக கூட்டணியில் இல்லை. பாஜகவின் திட்டங்கள் தமிழகத்தில் அதிமுகவின் வெற்றியை பாதிக்காது” எனத் தெரிவித்தார்.
Loading More post
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
சேப்பாக்கம்-குஷ்பு; ராசிபுரம்-முருகன்; மயிலை-கே.டி.ராகவன்: லீக் ஆன பாஜக உத்தேச பட்டியல்!
விஜயகாந்த் தலைமையில் தேமுதிக வேட்பாளர்கள் நேர்காணல் தீவிரம்!
"எங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது!” - மக்கள் நீதி மய்யம்
"கண் இருந்தால் கண்ணீர் வரத்தான் செய்யும்!" - கே.எஸ்.அழகிரி விளக்கம்
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?