கடந்த 3 ஆண்டுகளில் கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியின் போது தூய்மை பணியாளர்கள் 288 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகளை அறிவியல் உலகம் கண்டுபிடித்துக்கொண்டு இருந்தாலும், கழிவுநீர் சுத்தம் செய்யும் போது தூய்மை பணியாளர் உயிரிழப்பு என்ற செய்தி அவ்வப்போது வந்துகொண்டே இருக்கின்றன. தொழில்நுட்பங்கள் பல இருந்தாலும் சரியான கழிவுநீர் பாதை கட்டமைப்பு இல்லாததே இந்த பிரச்னைக்கு பிரதான காரணமாக உள்ளது.
இந்நிலையில் கழிவுநீர் சுத்தம் செய்யும் போது தூய்மை பணியாளர்கள் உயிரிழப்பு குறித்து சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், கழிவுநீர் சுத்தம் செய்யும் போது தூய்மை பணியாளர்கள் குறித்த கணக்கெடுப்பு 2018-19ல் 18 மாநிலங்களில் 194 மாவட்டங்களில் நடைபெற்றது.
மாநில அரசுகள் கொடுத்த தரவுகளின் படி, கடந்த 3 ஆண்டுகளில் ஆகஸ்ட் 31 2020 வரை கழிவுநீர் சுத்தம் செய்யும் போது தூய்மை பணியாளர்கள் 288 பேர் உயிரிழந்துள்ளனர். அதே தரவுகளின்படி, இந்திய அளவில் 51,835 பணியாளர்கள் கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் உத்தர பிரதேசத்தில் மட்டுமே 24,932 பேர் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?