நடிகர் சூர்யா தெரியாமல் பேசுகிறார் - நடிகர் ராதாரவி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திமுக ஒரு காலத்தில் வெற்றி பெற்றதற்கு ரஜினியும் காரணம் என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்


Advertisement

இன்று ராதாரவி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதில், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும். ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர் .திமுக ஒரு காலத்தில் வெற்றி பெற்றதற்கு ரஜினியும் காரணம். தான் தயாநிதி மாறனை எம்பி ஆக்கியதற்கு காரணம் அவருக்கு இந்தி தெரியும் என்பதற்காக என்று கருணாநிதியே தெரிவித்தார்.

image


Advertisement

நடிகர் விஷால் பாஜகவில் இணைந்தால் நல்லது தான். நானும் அவருடன் இணைந்து பணியாற்ற தயார். நடிகர் சூர்யா எதை பேசினாலும் தெரியாமல் பேசுகிறார். அம்பேத்கரைப் பற்றி பேச பாஜகவிற்கு மட்டுமே தகுதி உள்ளது. அம்பேத்கருக்கு லண்டனில் வீடு கட்டியவர்கள் பாஜகவினர். இரண்டு முறை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது நடிகர் சங்க கட்டடம். நடிகர் சங்கம் உருப்படாது என தெரிவித்தார்.

நயன்தாரா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்கு நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனையடுத்து, திமுகவில் இருந்து விலகிய ராதாரவி, அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பின்னர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement