வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மகன்: உடலைத் தேடி தினமும் ஆற்றக்கரை வரும் தந்தை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மழையின்போது பைக்கோடு வெள்ளத்தில் அடித்துச் சென்ற இளைஞரின் உடலைத் தேடி, அவரது தந்தை ஒரு மாதமாக தினமும் ஆற்றங்கரைகளுக்கு தேடிச் செல்வது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 60 வயதாகும் கமல் சிங் மகன் ஹிமான்ஷு கதம். 28 வயதாகும் இவர் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணிபுரிந்துவிட்டு பைக்கில் வீட்டிற்கு வரும்போது, பாலத்தின் மேலே வந்த மழை வெள்ளத்தில் பைக்கோடு அடித்துச் செல்லப்பட்டார். அங்கிருந்தவர்கள் வெள்ளத்தில் செல்லவேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் சென்றதால், பரிதாபமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். மகன் நிலைமைக் குறித்து மறுநாள் செய்தித்தாளில் பார்த்துதான் கமல் சிங் அறிந்துகொண்டுள்ளார்.

image


Advertisement

இப்போதுவரை ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரின் உடல் கிடைக்கவில்லை. அவரது பைக் மட்டும் கிடைத்துவிட்டது. அரசு துறையினர் தீவிரமாகத் தேடியும் கிடைக்காமல் போனதால் ஓய்ந்துவிட்டார்கள். அவர்கள் முயற்சியை கைவிட்டாலும் பெற்ற மகனல்லவா? கமல் சிங்கால் எப்படி சும்மா இருக்க முடியும்? மகனின் புகைப்படத்தோடு உடலைத்தேடி இந்தூரைச் சுற்றியுள்ள அனைத்து ஆற்றங்கரைகளுக்கும் தினமும் வந்து தேடிக்கொண்டிருக்கிறார். அவரின் இந்தச் செயல் பொதுமக்களிடையே கண்ணீரையும் உருக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

image

மேலும், கமல் சிங்கிற்கு இரண்டே பிள்ளைகள்தான். அதில், கடந்த ஏப்ரல் மாதம்தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு மகள் இறந்தார். அதற்கடுத்த இரண்டு மாதங்களிலேயே மகனையும் பறிகொடுத்துவிட்டு நடைபிணமாக வாழ்ந்து வருகிறது கமல் சிங் குடும்பம். இதற்கே, அவரது மகன் தான் வீட்டில் வருமானம் ஈட்டும் ஒரே நபர். இரண்டு பிள்ளைகளையும் பறிகொடுத்ததோடு வறுமையிலும் வாடி வருகிறது கமல் சிங்கின் குடும்பம்.


Advertisement

இதையும் படிக்கலாமே...’இன்று நடப்பவற்றையெல்லாம் அன்றே எச்சரித்தார் அண்ணா!!’ எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன்

 

loading...

Advertisement

Advertisement

Advertisement