100 கேமராக்களை ஆராய்ந்து குற்றவாளிகளை கச்சிதமாக பிடித்த சென்னை போலீஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தம்பதியரை தாக்கி செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து 20 நாட்களில் கண்டுபிடித்த நீலாங்கரை தனிப்படை போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Advertisement

image

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம், சோழமண்டல் ஆர்ட்டிஸ்ட் விலேஜில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருபவர் சிற்பி கருணாமூர்த்தி(64). இவரது மனைவி கீதா(58). இருவரும் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதியன்று இரவு 9.30 மணியளவில் வீட்டிற்கு வெளியே நடைபயிற்சி மேற்கொண்டனர். அப்போது அவர்களை நோட்டமிட்ட இருவர் பின் தொடர்ந்து வந்து கீதாவின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறிக்க முற்பட்டனர். கருணாமூர்த்தி உடனடியாக அவரிடம் சண்டையிட்டு பிடிக்க முற்பட்டார். அப்போது வெளியில் நோட்டமிட்டுக் கொண்டிருந்த நபர் இருசக்கர வாகனத்தோடு உள்ளே வந்து முதியவரை தாக்கிவிட்டு செயினை பறித்துக் கொண்டு கீதாவை கீழே தள்ளிவிட்டு விட்டு தப்பிச் சென்றனர்.


Advertisement

இது குறித்து கருணாமூர்த்தி நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீலாங்கரை உதவி ஆணையர் விஷ்வேஷ்வரய்யா தலைமையில் உதவி  ஆய்வாளர் தமிழன்பன், காவலர்கள் இன்பராஜ் மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையை துவங்கினர்.

தனிப்படை போலீசார் நிகழ்விடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றினர். இருள் சூழ்ந்து இருந்ததாலும், இருசக்கர வாகன பதிவெண்ணை வேப்பிலை வைத்து மறைத்திருந்ததாலும் செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடிப்பதற்கு போலீசாருக்கு துப்பு கிடைக்கவில்லை.

image


Advertisement

இருப்பினும் ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து செம்மஞ்சேரி வரை சுமார் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. டியோ இருசக்கர வாகனம் இந்த ஆண்டு பிப்ரவரியில் தான் வெளியானது என்பதனால் கடந்த 6 மாதமாக விற்பனையான 60-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களின் விவரங்களை சேகரித்த போலீசார், இருசக்கர வாகனத்தில் விநாயகர் ஸ்டிக்கர் ஓட்டி இருப்பதை சிசிடிவியில் பார்த்ததை வைத்து வாகனம் செம்மஞ்சேரி எட்டடுக்கு பகுதியை சேர்ந்த முகமது என்பவருடையது என்பதை கண்டறிந்து அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவரது தம்பி இளஞ்சிறார் ஒருவர் நவமணி(எ) நட்ராஜ்(28) என்பவரோடு சேர்ந்து செயின் பறித்தது தெரியவந்தது.

சிறாரை பிடித்து கடந்த வாரம் சிறையில் அடைத்த நீலாங்கரை போலீசார் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் தேடுவதை அறிந்த நவமணி சித்தாலபாக்கம், பள்ளிகரணை, காரப்பாக்கம் என இடத்தை மாற்றி மாற்றி தலைமறைவாக இருந்த நிலையில் திருப்போரூர் அருகே பதுங்கியிருந்தவரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் இவர் மீது கும்மிடிப்பூண்டியில் ஒரே நேரத்தில் மூன்று பேரை கொன்ற கொலை வழக்கு, 3 கஞ்சா வழக்கு, 2 அடிதடி வழக்கு, கொள்ளை வழக்கு என 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 5 சவரன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சமபவம் நடந்து 20 நாட்களாக 100 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளியை கைது செய்து நகையை மீட்ட உதவி ஆய்வாளர் தமிழன்பன் மற்றும் காவலர் இன்பராஜ் அடங்கிய தனிப்படை போலீசாரை பாதிக்கப்பட்டவர்களும், அடையார் துணை ஆணையர் விக்ரமன் அவர்களும் பாராட்டினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement