துருவ் விக்ரமின் ட்ரெண்டி ஹேர்ஸ்டைல்: குவியும் லைக்ஸ்!

Dhruv-vikram--looks-cool-in-his-new-trendy-hair-cut

சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் புதுமையான பதிவுகள் வெளியிடுவதில் ஆர்வம் கொண்டவர். தெலுங்கில் சூப்பர்ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆதித்ய வர்மா மூலம் புதுமுக நடிகராக அறிமுகமானார்.துறுதுறு நடிப்பின் மூலம் தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ள துருவ், முதன்முறையாக தந்தையுடன் சேர்ந்து நடிக்கவுள்ளார்.


Advertisement

image

சீயான் 60 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். முன்னணி நடிகருக்கான அனைத்துத் திறன்களையும் பெற்றுள்ள துருவ் விக்ரம், இந்தப் படத்திற்காக ஜிம்முக்குப் போய் உடலைத் தேற்றுவதில் கவனமாக இருக்கிறார்.


Advertisement

image

அண்மையில் தன் பிட்னஸ் படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டிருந்தார். தற்போது டிரெண்டியான தன்னுடைய புதிய ஹேர்ஸ்டைல் புகைப்படத்தைப் பதிவிட்டு லைக்ஸ் அள்ளிவருகிறார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement