தீயாய் வேலை செய்யும் படக்குழு.. தீபாவளிக்கு வெளியாகிறதா டாக்டர்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என கூறப்படுகிறது


Advertisement

கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நெல்சன் திலீப் குமார். நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் கலக்கல் காமெடி படமாக அதனை அவர் உருவாக்கி இருப்பார். அந்தப் படத்திற்கு பிறகு அவர் இயக்கி வரும் திரைப்படம் டாக்டர். ஹீரோ திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

image


Advertisement

சென்னை, கோவா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்றை பெற்றது. இதற்கிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் டாக்டர் படத்தின் படப்பிடிப்பும் நின்றுபோனது. ஆனால் இந்த ஊரடங்கு நேரத்தில் படத்தின் எடிட்டிங்கை இயக்குநர் முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் இசை தொடர்பான வேலைகளும் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள படப்பிடிப்புகள் அக்டோபர் இறுதிக்குள் முடிக்கப்பட்டு படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இந்தப்படம் தீபாவளிக்கு வெளியானால் தீபாவளிக்கு வெளியாகும் சிவகார்த்திகேயனின் முதல் படம் இதுவாகும். இதற்கிடையே தற்போது மூடப்பட்டுள்ள திரையரங்குகளும் விரைவில் திறக்கப்பட்டு தீபாவளி நேரம் வழக்கமான கொண்டாட்டத்தில் இருக்கும் எனவும் திரைத்துறையினர் நம்புகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement