சொத்துக்காக பெற்ற தாயை மின்சாரம் செலுத்தி ஒருநாள் முழுவதும் வீட்டுக்குள் அடைத்து வைத்து மகன் சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி புள்ளம்பாடியைச்சேர்ந்த லட்சுமி என்றவர், தனது மகனிடம் இருந்து சொத்துகளை மீட்டுத்தருமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். 2010ல் கணவர் கோபால் இறந்துவிட்டதால் மகன் ஜோதிமணியுடன் இணைந்து, கோபாலின் ஹாலோ பிளாக் தொழிலை நடத்தி வந்தார் லட்சுமி. அதன்பிறகு தன்னை துன்புறுத்தி சொத்துகளை கேட்டு மகன் மீது மிரட்டுவதாக லட்சுமி புகார் அளித்துள்ளார்.
பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள், நகைகளை கேட்டு வீட்டைவிட்டு விரட்டிவிட்டதாக கூறியுள்ள லட்சுமி, வீட்டுக்குள் தன்னை அடைத்து வைத்து மின்சாரம் செலுத்தி சித்ரவதை செய்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். தன்னை சித்தரவை செய்வது குறித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், புள்ளம்பாடி காவல்நிலையத்தில் கடந்த பத்தாம் தேதி மீண்டும் புகார் அளித்துள்ளார்.
தற்போது மகள் வீட்டில் வசித்துவரும் சூழலில், அங்கும் வந்து மகன் மிரட்டுவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். தாய் இறந்தால், சொத்தில் அக்காவுக்கும் பங்கு அளிக்க வேண்டியிருக்கும் என்பதால், முன்கூட்டியே அனைத்து சொத்துகளையும் தன்பெயரில் எழுதிக்கொள்ள மகன் தன்னை துன்புறுத்துவதாக அந்த மூதாட்டி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்