''நல்ல விளைவுகளை கொடுக்கிறது'': கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த அவசர ஒப்புதல் அளித்த யூஏஇ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார  அமைச்சகம், தங்களின் கோவிட் -19 தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு "அவசர ஒப்புதல்" அளித்துள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளாகும் அதிக ஆபத்தில் இருக்கும்  சுகாதார பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

image

சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சர் அப்துல் ரஹ்மான் பின் முகமது அல் ஓவைஸ் கூறும்போது “கோவிட்-19 தடுப்பூசியின் முதல்  மற்றும்  இரண்டாவது  சோதனைகளின் முடிவுகள் பாதுகாப்பாக உள்ளது, மேலும் இது சிறப்பானதாகவும் மற்றும் நல்ல விளைவுகளை கொடுப்பதகாவும் உள்ளது” என தெரிவித்தார்


Advertisement

கோவிட் -19 க்கான தேசிய மருத்துவக் குழுவின் தலைவரும், தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளின் முதன்மை புலனாய்வாளருமான டாக்டர் நவால் அல் காபி “மருத்துவ பரிசோதனைகள் சரியான பாதையில் நகர்கின்றன, இதுவரை அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக உள்ளது. ஆய்வு தொடங்கிய ஆறு வாரங்களுக்குள், 125 தேசிய இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும்  31,000 தன்னார்வலர்கள் மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்றுள்ளனர். இதுவரை அறிவிக்கப்பட்ட பக்க விளைவுகள் லேசானவை மற்றும் பிற தடுப்பூசிகளைப் போலவே எதிர்பார்க்கப்படுபவைதான், குறிப்பாக கடுமையான பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை  "என்றார்

அவசர மற்றும் வரையறுக்கப்பட்ட பயன்பாட்டிற்கான உரிமத்தின் கீழ் தடுப்பூசியின் பயன்பாடு, தயாரிப்பு பண்புகள், மருத்துவ ஆய்வுகளின் தரவு மற்றும் கிடைக்கக்கூடிய அனைத்து அறிவியல் சான்றுகளையும் கருத்தில் கொண்டு செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். "தடுப்பூசியின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடைமுறைகளையும் தடுப்பூசியை உருவாக்கியவர்களுடன் ஒருங்கிணைந்து  சுகாதாரத்துறை அதிகாரிகள் பின்பற்றியுள்ளனர் " என்று டாக்டர் அல் காபி கூறினார்.

 அபுதாபி ஹெல்த் சர்வீசஸ் கம்பெனி (செஹா) ஜூலை மாதம் சுகாதாரத் துறை - அபுதாபி, ஜி 42 ஹெல்த்கேர் மற்றும் சீன மருந்து நிறுவனமான சினோபார்ம் சிஎன்பிஜி ஆகியவை இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் சுமார் 42 நாட்களுக்கு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். அவர்கள் குறைந்தது 17 தடவைகள் சோதனை மையங்களுக்குச் செல்ல வேண்டும். இந்த நேரத்தில்  அவர்கள்  நாட்டிற்கு வெளியே பயணம் செய்யக்கூடாது, மேலும் அவர்கள் கிளினிக்குகளை எளிதாக அணுகும் வகையில் இருக்க வேண்டும். இதற்குப் பிறகு, ஆறு மாதங்கள் வரை தொலைதொடர்பு மூலம் அவ்வப்போது பின்தொடர்வுகள் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement