ஐபிஎல் தொடர் உருவானதற்கு காரணம் என்ன ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலகின் முன்னணி டி20 லீக்கான ஐபிஎல் திருவிழா வருகிற 19 ஆம் தேதி அமீரகத்தில் தொடங்குகிறது. 12 ஆண்டுகளைக் கடந்த பின்பும், தொடர்ந்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வரும் இத்தொடர் பிறந்த கதை குறித்து காணலாம்.


Advertisement

ரசிகர்களால் உலகக் கோப்பைக்கு இணையாக பார்க்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் என நிறைந்திருந்த கிரிக்கெட் உலகில் குழந்தையாக அவதரித்ததுதான் இருபது ஓவர் போட்டி. நான்கு மணி நேரத்தில் முடியும் ஆட்டங்கள், நாலா புறமும் பறக்கும் சிக்ஸர்கள், இறுதி வரை குறையாத விறுவிறுப்பு என ரசிகர்களை முதல் பார்வையிலேயே பற்றிக் கொண்டது டி20 போட்டி. தென்னாப்பிரிக்காவில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதால், இந்திய ரசிகர்களின் டி20 மோகம் இமயம் வரை எகிறியது.

image


Advertisement

அதன் விளைவாக, நகரங்களை அடிப்படையாக கொண்ட டி20 தொடரை தொடங்க பிசிசிஐ திட்டமிட்டது. பணம் கொழிக்கும் தொடரில் எட்டு அணிகளை களமிறக்க முடிவெடுக்கப்பட்டு, அதற்கான ஏலம் அறிவிக்கப்பட்டது. அணிகளின் உரிமத்தைப் பெற இந்தியாவின் மிகப்‌பெரும் தொழிலதிபர்கள் மல்லுக்கட்டி கொண்டு விண்ணப்பித்தனர். 2008 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற இந்த ஏலத்தின் முடிவில், ரிலையன்ஸ் நிறுவனம் மும்பை இந்தியன்ஸ் அணியை அதிக தொகைக்கு வாங்கியது. அதற்கு அடுத்தப்படியாக, பெங்களூரு, ஐதராபாத் அணிகள் அதிக விலைக்கு ஏலமெடுக்கப்பட்டுள்ளன. பாலிவுட் நடிகர் ஷாரூக் கான், நடிகைகள் பிரீத்தி ஜிந்தா, ஜூஹி சாவ்லா மற்றும் தொழிலதிபர்கள் அணிகளின் உரிமையாளர்களாக தங்களை இணைத்து கொண்டனர்.

image

பிரபல கூடைப்பந்து தொடரான என்.பி.ஏ, பிரிட்டனின் இங்கிலீஸ் பிரிமியர் லீக் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஐபிஎல் தொடரை நடத்த ஆயத்தமானது பிசிசிஐ. அப்போதைய காலக் கட்டத்தில், லீக் கிரிக்கெட் பிரபலமடையாத நிலையில், ஐசிஎல் என்னும் கிரிக்கெட் தொடருக்கு போட்டியாகவே ஐபிஎல் பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களின் ஆதரவு அலை சுனாமியாக இருந்ததால் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத தொடராக பின்னாளில் ஐபிஎல் உருமாறியது.


Advertisement

image

ஐபிஎல் விளையாட்டின் அமோக வெற்றிக்கு தொடக்க சீசனின் முதல் போட்டியே அச்சாரம் போட்டது. 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்ற தொடக்க போட்டியில் பெங்களூரு - கொல்கத்தா அணிகள் மோதின. அதில், பத்து பவுண்டரி, 13 சிக்ஸர்கள் என 158 ரன்களை குவித்து ருத்ர தாண்டவம் ஆடினார் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் பிரண்டன் மெக்கல்லம். ஒரு வருட அதிரடியை ஒரே போட்டியில் கண்டது போல உணர்ந்த ரசிகர்கள், ஐபிஎல்லை அரியணையில் ஏற்றி வைத்து விட்டனர். அன்று முதல் இன்று வரை உலகக் கோப்பைக்கு இணையாக இந்திய ரசிகர்களால் ஐபிஎல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement