[X] Close

“ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உதவுகிறேன்” - தகவல்களை மெயில் அனுப்புமாறு கேட்ட சோனு சூட்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உதவுவதாகவும், தகவல்களை மெயில் அனுப்புமாறும் பாலிவுட் நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.


Advertisement

ட்விட்டரில் இந்த தகவலை அவர் பகிர்ந்துள்ளார். 

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சோனு, “நிதி சிக்கலால் நன்றாக படித்து சாதிக்க வேண்டுமென்ற பெரிய கனவுகளையும், லட்சியங்களையும் கொண்டிருக்கின்ற எந்தவொரு மாணவரது கல்வியும் பாதிக்கப்படக் கூடாது என நான் நினைக்கிறேன். அதனால் அது மாதிரியான மாணவர்களது உயர்கல்விக்கான முழு செலவையும் உதவித்தொகையாக கொடுக்க உள்ளேன்.


Advertisement

Hindustaan Badhega Tabhi, Jab Padhenge Sabhi!
Launching full scholarships for students for higher education.I believe,financial challenges should not stop any one from reaching their goals.Send in ur entries at scholarships@sonusood.me (in next 10 days) & I will reach out to u?? pic.twitter.com/JPBuUUF23s

— sonu sood (@SonuSood) September 12, 2020

ஆர்வமுள்ளவர்கள் scholarships@sonusood.me மெயில் ஐடிக்கு உங்களது விவரங்களை அடுத்த பத்து நாட்களுக்குள் அனுப்பவும். நான் உங்களை தொடர்பு கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். 


Advertisement

image

நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு சமயத்திலிருந்தே எளிய மக்களுக்கு சோனு சூட் உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement