கொரோனா தொற்றால் சோகம் : முன்னாள் எம்எல்ஏ தங்கவேலு மரணம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தங்கவேல் உயிரிழந்தார்.


Advertisement

கோவை மாவட்டத்தின் செயலாளராக 11 ஆண்டுகள் பணியாற்றிய வந்த, திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான தங்கவேல் அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 15 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தார்.
image

இந்நிலையில் அவர் இன்று அதிகாலை சிகிச்சைப் பலன்றி அவர் உயிரிழந்தார். அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கு கொள்ளும் தங்கவேலுவின் இறுதிச்சடங்கு திருப்பூரில் நடைபெற உள்ளது. அவரது மனைவிக்கும் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர் குணமாகி வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement