சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடப் போகும் 11 வீரர்கள் யார் ? என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வரும் சனிக்கிழமை அன்று துபாயில் ஐபிஎல் தொடர் ஆரம்பமாக உள்ளது.
நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை கட்டுப்பாட்டு நடைமுறைகளை பிசிசிஐ அமல்படுத்தியுள்ளது.
துபாயில் முகாமிட்டுள்ள சிஎஸ்கே அணியிலிருந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா கடந்த சில நாட்களுக்கு முன்னர் சொந்த காரணங்களுக்காக இந்தியா திரும்பியதால், இந்த முறை தோனி தலைமையிலான சென்னை அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க போகும் வீரர்கள் யார் ? என்ற கணிப்புகள் ரசிகர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா சென்னை அணியின் பிளேயிங் லெவேன்யில் விளையாட உள்ள பதினோரு வீரர்களின் உத்தேச பட்டியலை வெளியிட்டுள்ளார்.
சோப்ரா கூறும்போது, “ஷேன் வாட்சன் மற்றும் அம்பாதி ராயுடு ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களம் இறங்க வேண்டும். அதை தொடர்ந்து ரெய்னா இறங்கி விளையாடும் பொசிஷனில் டு பிளெஸ்ஸி, நான்காவதாக கேதார் ஜாதவ் மற்றும் மிடில் ஆர்டரில் தோனி, ஜடேஜா, பிராவோ விளையாட வேண்டும். இதன் மூலம் பேட்டிங்கின்போது பிற்பாதியை சென்னை அணி பேலன்ஸ் செய்யலாம்.
பவுலிங் யூனிட்டில் இம்ரான் தாஹிர், பியூஷ் சாவ்லா, தீபக் சஹார், ஷர்துல் தாகூர் இடம் பிடிப்பது தான் சரியான பிளேயிங் லெவேன் கொண்ட அணியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் அல்லது அனுபவ வீரர் முரளி விஜயும் வாட்சனுடன் சென்னைக்காக ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களம் இறங்கவும் வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதேபோல ஆல் ரவுண்டர்கள் சாம் கரன், சான்டனர் மாதிரியான வீரர்களும் சென்னை அணிக்காக விளையாடி அசத்தலாம்.
வேகப்பந்து வீச்சில் லுங்கி நிகிடி, ஜோஷ் ஹசல்வுட் மற்றும் சுழற்பந்து வீச்சில் கரண் ஷர்மாவும், தமிழக வீரர் சாய் கிஷோரும் விளையாட வாய்ப்புகள் உள்ளன.
வரும் சனிக்கிழமை அன்று நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதவுள்ளது.
Loading More post
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
இரவு நேர ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை - காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
மாஸ்க் அணியாததை தொடர்ந்தால் ரூ.10,000 அபராதம் - உ.பி. அரசு அதிரடி!
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்