[X] Close

”அப்பா நகைகளை கொடுக்கச் சொன்னார்” சிறுமியை நூதனமாக ஏமாற்றிய நபர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆவடியில் நூதன முறையில் சிறுமியை ஏமாற்றி நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Advertisement

image

ஆவடியை அடுத்த கொள்ளுமேடு, ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. தனியார் நிறுவன ஊழியரான இவர், தனது மகள் ஜனனி, மகன் ராகுல் மற்றும் நித்தீஷ் ஆகிய மூவரையும் வீட்டில் விட்டுவிட்டு தனது மனைவியுடன் வேலைக்குச் சென்று விட்டார்.


Advertisement

அப்போது, அவரது வீட்டிற்கு பைக்கில் வந்த மர்ம நபர் ஜனனியிடம், நான் உங்களது தந்தைக்கு நெருங்கிய நண்பர். உங்கள் தந்தை எனக்கு ரூ.1.20 லட்சம் கடன் தர வேண்டும், அதற்கு பதிலாக அவர் நகையை தருவதாக கூறியிருந்தார். அதனால் நகையை வாங்கிச் செல்வதற்காக வந்துள்ளேன் என கூறி உள்ளார்.

image

அதோடு அவர், ஜனனி எதிரே செல்போனில் தட்சிணாமூர்த்தியிடம் பேசுவது போல் நடித்துள்ளார். இதனை நம்பிய சிறுமி ஜனனி, வீட்டு பீரோவை திறந்து அங்கிருந்த இரு நெக்லஸ், ஒரு ஜோடி கம்மல் உட்பட 7சவரன் நகைகளை எடுத்து வந்து அவரிடம் கொடுத்துள்ளார்.


Advertisement

பின்னர், நகையை வாங்கிய அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதன்பிறகு, மாலை வீடு திரும்பிய தட்சிணாமூர்த்தியிடம் மகள் ஜனனி நடந்ததை கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த தட்சிணாமூர்த்தி ஆவடி டேங்க் பேக்டரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

image

இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து நூதன முறையில் சிறுமியிடம் நகைகளை வாங்கிச் சென்ற மர்ம நபரை அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement