கஞ்சா விற்பதில் ஏற்பட்ட மோதல்? திருவேற்காட்டில் ரவுடி வெட்டி படுகொலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருவேற்காட்டில் ரவுடி வெட்டி படுகொலை. கஞ்சா விற்பதில் ஏற்பட்ட மோதலால் கொலை நடந்ததா என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


Advertisement

image

சென்னை திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதியில் உள்ள முட்புதரில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக வந்த தகவலையடுத்து திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது வாலிபர் ஒருவர் தலை மற்றும் கை, கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.


Advertisement

image

இதையடுத்து அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் திருவேற்காடு அன்பு நகரைச் சேர்ந்த அஜித் (என்ற) அஜித்குமார் (23), என்பதும் இன்று காலை மது அருந்துவதற்காக அவரது நண்பர்கள் இங்கு அழைத்து வந்து கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.

image


Advertisement

மேலும், கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதலால் கொலை நடந்ததா? அல்லது முன்விரோதம் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அஜித்குமார் மீது கொரட்டூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கும் திருவேற்காடு காவல்நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement