புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் முதுகுடியைச் சேர்ந்த புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாலிங்கம் என்பவர் இன்று தனது இருசக்கர வாகனத்தில் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் ராஜாலிங்கத்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் ராஜாலிங்கத்தை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
இதனையடுத்து ராஜாலிங்கத்தை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் முதுகுடி அருகே சங்கரன்கோவில் செல்லும் பிரதான சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜாலிங்கத்துக்கும் தேசியாபுரம் பகுதியைச் சேர்ந்த, உயிரிழந்த தங்கவேலு உறவினர்களுக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Loading More post
அரசு பஸ் டிரைக் தொடரும்: தொழிற்சங்கங்கள்
ராகுலிடம் பொய் சொல்லி ஏமாற்றியவர் நாராயணசாமி -பிரதமர் மோடி
மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர் மோடி..
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
திமுக - காங்கிரஸ் இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் - கே.எஸ்.அழகிரி
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை