[X] Close

எம்ஜிஆரின் அண்ணன் மகன் எம்.சி.சந்திரன் கொரோனாவால் மரணம் : முதல்வர், துணைமுதல்வர் இரங்கல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் அண்ணன் மகன் எம்.சி.சந்திரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரின் மரணத்திற்கு தமிழக முதல்வர், துணைமுதல்வர், டிடிவி.தினகரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Advertisement

image

இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “புரட்சித்தலைவர் டாக்டர்.எம்ஜிஆர் அவர்களின் சகோதரர் திரு.எம்.ஜி.சக்ரபாணி அவர்களது மகன் திரு.எம்.சி.சந்திரன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அறிந்து  வருத்தமுற்றோம். அன்னாரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.


Advertisement

 அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “இதயதெய்வம் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் அண்ணன் திரு.எம்.ஜி. சக்கரபாணி அவர்களின் மகன் திரு. சந்திரன் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான சு. திருநாவுக்கரசரும் இவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement