அசரங்கா கொடுத்த ஷாக்.. அமெரிக்கா ஓபனிலிருந்து அதிர்ச்சியுடன் வெளியேறினார் செரினா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், பெலாரஸை சேர்ந்த வீராங்கனை விக்டோரியா அசரங்காவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.


Advertisement

image

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் 6-1 என லீட் கொடுத்த செரீனா அதற்கடுத்த இரண்டு செட்களையும் 3-6, 3-6 என இழந்து தொடரை விட்டே வெளியேறினார். 


Advertisement

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க ஓபன் தொடரில் இறுதி போட்டி  வரை முன்னேறிய செரீனா இந்த முறை அரையிறுதியோடு சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

image


Advertisement

‘முதல் செட்டில் ஏற்பட்ட பின்னடைவை மீட்டெடுக்க முயற்சி செய்தேன். அந்த முயற்சி எனக்கு சாதகமாக அமைந்தது’ என ஆட்டத்திற்கு பிறகு தெரிவித்தார் விக்டோரியா அசரங்கா.

இந்த போட்டியில் செரீனா வில்லியம்ஸிற்கு இடது காலில் ஏற்பட்ட வலியும் அவரது தோல்விக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்த்து விளையாட உள்ளார் விக்டோரியா அசரங்கா.

loading...

Advertisement

Advertisement

Advertisement