ஆந்திராவில் 20% பேருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி: ஆய்வில் தகவல்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆந்திராவில் 20% பேருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.


Advertisement

ஆந்திராவின் மக்கள் தொகை 5.34 கோடி. அதில் 20 சதவீதம் பேருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளதாக ‛செரோ' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் மாநிலத்தின் 13 மாவட்டங்களில் 5,000 பேரிடம் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட ஆய்வில் 19.7 சதவீதம் பேருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.


Advertisement

image

ஆந்திர மாநில சுகாதார மற்றும் குடும்பநலத் துறை கமிஷனர் கடாமேனி பாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில், நகர்ப்புறங்களில் 22.5 சதவீதம் பேருக்கும் கிராமப்புறங்களில் 18.2 சதவீதம் பேருக்கும் கொரோனா எதிர்ப்பு சக்தி காணப்பட்டதாக தெரிவித்தார். எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த வரை 19.9 சதவீத ஆண்களிடமும், 19.5 சதவீத பெண்களிடம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தில் 90 முதல் 100 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்று இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. சித்தூர் மாவட்டத்தில் 100 சதவீதம் பேருக்கும் அறிகுறிகள் ஏதும் இல்லாத கொரோனா உள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement