”கிம் ஜாங் உன்னை குறைத்து மதிப்பிடாதீர்கள்” – அதிபர் ட்ரம்ப் சூசகம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்  குறித்து முக்கியமான தகவல் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்  ட்ரம்ப்.


Advertisement

வடகொரியா அதிபரான கிம் ஜாங் உன் ஆழ்ந்த கோமா நிலையில் இருக்கிறார் எனவும் ஒருவேளை அவர் இறந்திருக்கலாம் என்றும் பல்வேறு ஊகங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் ஆட்சி அதிகாரங்களை தனது சகோதரியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் எனவும் தகவல் வெளியானது.

கிம் ஜாங் உன்  குறித்து அந்நாட்டு அரசுத் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதால் குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிம் ஜாங் உன் குறித்து முக்கியமான தகவல் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Advertisement

அதில் கிம் ஜாங் உன் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்றும் அவரை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement