“பவுலிங்கில் நீங்கள் பும்ரா அளவிற்கு சிறப்பாகஇல்லை” ரசிகரின் கேள்விக்கு பிராட் ’நச்’ பதில்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தனக்கு பும்ராவை பிடிக்கும் என்றும், ஆனால் பவுலர்களை ஒப்பீடு செய்ய வேண்டாமே என்றும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.


Advertisement

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான பிராட் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் துடிப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். அதில், “பவுலிங்கில் நீங்கள் பும்ரா அளவிற்கு சிறப்பாக இல்லை” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

image


Advertisement

அந்த கருத்துக்கு பண்புடன் பதிலளித்திருந்த பிராட், “எனக்கும் அவரை பிடிக்கும். எனது விருப்பமான பவுலர்களில் பும்ராவும் ஒருவர். உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒப்பீடு செய்ய வேண்டிய தேவை இல்லை. நல்ல பந்துவீச்சாளரை ரசியுங்கள்” என்று தெரிவித்திருந்தார். இந்த பதில் மூலம் தனது அனுபவத்தை மட்டுமின்றி, பக்குவத்தையும் பிராட் வெளிப்படுத்திவிட்டார்.

image

இதுவரை 143 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிராட், 514 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அத்துடன் 3,335 ரன்கள் எடுத்திருக்கிறார். ஒரு சதமும், 13 அரை சதங்களையும் அடித்துள்ளார். 121 ஒருநாள் போட்டிகளில் 178 விக்கெட்டுகளையும், 56 டி20 போட்டிகளில் 65 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 34 வயது நிரம்பிய இவர், சர்வதேச கிரிக்கெட்டில் 14 வருடங்கள் அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

திமுகவில் ஆ.ராசா, பொன்முடிக்கு துணை பொதுச் செயலாளர் பதவி?

loading...

Advertisement

Advertisement

Advertisement