பப்ஜிக்காக தாத்தாவின் பென்ஷனில் இருந்து ரூ.2.34 லட்சத்தை திருடிய 15 வயது பேரன்.!

To-pay-for-PUBG--boy-transfers-2-3L-from-grandad---s-pension-account

இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்களை கொண்ட கேம் செயலி ‘பப்ஜி’. இந்த கேமிற்கு அதிதீவிர பிரியர்களாக இந்திய இளைஞர்கள் உள்ளனர். இந்த 'கேம்' ஆல் பல அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இதற்கிடையே மத்திய தொழில்துறை அமைச்சகம் ‘பப்ஜி’ உள்ளிட்ட 118 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.


Advertisement

இந்நிலையில் இந்த பப்ஜி விளையாட்டால் பேரன் ஒருவன் தன் தாத்தாவிடமே நவீன திருட்டில் ஈடுபட்டுள்ளான். வடக்கு டெல்லியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் தன் தாத்தாவின் பென்ஷன் பணத்தில் இருந்து ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் கிட்டத்தட்ட ரூ.2.34 லட்சம் எடுத்துள்ளார். செலவுக்காக அல்ல, பப்ஜிக்காக.

image


Advertisement

பப்ஜி விளையாட்டில் சிறப்பு பாஸ் பெற்று விளையாட்டில் தீவிரம் காட்டலாம். அதற்கு பணம் கட்ட வேண்டும். அந்த பணத்தை தன் தாத்தாவின் கணக்கில் இருந்து எடுத்துள்ளான் அந்த பேரன். தன்னுடைய கணக்கில் ரூ.275 மட்டுமே மீதம் இருப்பதாக 65 வயது முதியவருக்கு செல்போனில் மெசேஜ் வந்துள்ளது. இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் இந்த புகார் சைபர் கிரைம் போலீசாருக்கு சென்றுள்ளது.

முதியவர் கணக்கில் இருந்து பேடிஎம் மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதை கண்டுபிடித்த போலீசார் பெரியவரின் பேரன் தான் இந்த வேலையில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். இது குறித்து தெரிவித்துள்ள போலீசார், பெரியவரின் டெபிட் கார்டை பேரன் வீட்டில் கிடந்து எடுத்துள்ளான். அப்போது அதில் இருந்து பரிவர்த்தனை செய்ய முடிவு செய்துள்ளார். ஓடிபி வரும் போதெல்லாம் தாத்தாவின் செல்போனை எடுத்து அதிலிருந்து நம்பரை எடுத்துக்கொள்வான்.

image


Advertisement

பப்ஜிக்காக கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.2.34 லட்சத்தை அவன் பரிமாற்றம் செய்துள்ளான் என தெரிவித்துள்ளனர். பணத்தை எடுத்தது சொந்த பேரன் என்பதால் பெரியவர் வழக்கு ஏதும் பதியவில்லை. அந்த சிறுவனுக்கு போலீசார் அறிவுரைகளை வழங்கினர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement