விஜய் சேதுபதியின் காமெடி படத்தில் ராதிகா சரத்குமார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுமுக இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் காமெடிப் படத்தில் விஜய் சேதுபதிக்கு முக்கிய வேடம். அதில் நடிகை டாப்ஸிக்கு கலகலப்பான ஒரு பெண் கதாபாத்திரம் எனக் கூறப்படுகிறது. தற்போது அவர்களுடன் புதிதாக ராதிகா சரத்குமாரும் சேர்ந்துள்ளார். இதுபற்றி அவர் சமூகவலைதளத்தில் டாப்ஸியுடன் உள்ள படத்தை வெளியிட்டு டெவில்ஸ் அட் வொர்க் என்றும் பதிவிட்டுள்ளார்.


Advertisement

ஏற்கெனவே யோகிபாபுவும் படத்தில் இணைந்துள்ளார். ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு ராஜஸ்தானில் படப்பிடிப்பை தொடங்கியுள்ளது படக்குழு. இந்தப் படத்தில் நடிப்பது பற்றி சமூகவலைதளத்தில் ராதிகா சரத்குமார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

image


Advertisement

இந்தப் படத்தின் இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன், பிரபல இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் மகன். இயக்குநர் விஜய்யிடம் பல படங்களுக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement