ஸ்பெயின் நாட்டில் ஜெர்மன் கூட்டமைப்பால் இயக்கப்படும் டெய்டு ஆய்வகத்தில் அமைந்துள்ளது ஐரோப்பாவின் மிகப்பெரிய சூரிய தொலைநோக்கி கிரிகோர் (GREGOR). சூரியனின் மிக நேர்த்தியான மற்றும் துல்லியமான உள்அமைப்பை இந்த தொலைநோக்கி படம்பிடித்துள்ளது. குறிப்பாக சூரியனின் காந்தபுலத்தை மிகத் துல்லியமாக படம்பிடித்துள்ளது.
லீப்னிஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் சோலார் பிசிக்ஸை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் கொண்ட குழுவால் இந்த தொலைநோக்கியின் லென்ஸில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பாவிலிருந்து முன்பைவிட மிகத் துல்லியமாக, தெளிவாக சூரியனைக் காணமுடியும்.
மறுவடிவமைக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்கிமூலம் சூரியனில் 50கிமீ தொலைவில் உள்ள தெளிவான விவரங்களை விஞ்ஞானிகளால் காணமுடியும். கூர்மையான ஊசியை ஒரு கால்பந்தின்மீது வைத்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலிருந்து பார்ப்பதைப் போன்று தெரியும்.
இந்த திட்டம் மிகவும் உற்சாகமாகவும், சவாலாகவும் இருந்தது. இந்த தொலைநோக்கியின் படத்தரம், ஒளியியல், இயக்கவியல் மற்றும் மின்னணுவியல் ஆகியவற்றில் மறுவடிவமைப்பு செய்துள்ளதாக டாக்டர் லூசியா க்ளிண்ட் மற்றும் டெனெர்ஃபில் ஆகியோர் கூறியுள்ளனர். பல சிக்கல்களுக்கு மத்தியில் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!